Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ஸவின் வாழ்த்துச் செய்தி (மீண்டும் வருவது உறுதியாகிறது)


நாட்டுக்காக எண்ணும் நாட்டுக்காக அர்ப்பணிப்புகளை மேற்கொள்வோரின் எதிர்ப்பார்ப்புகளை ஒதுக்கி விட எந்த வகையிலும் தன்னால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று 18-02-2015  நடைபெற்ற மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்திற்கு அவர் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். இதனை கலாநிதி. தயான் ஜயதிலக்க வாசித்தார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நுகேகொடையில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தின் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.

நாம் அனுபவிப்பது தோல்வியை அல்ல, சூழ்ச்சியின் பிரதிபலனை. தோல்வியை தோல்வியாக ஏற்க நான் எப்போதும் பின் நிற்பதில்லை. அவமானம் என்பது என பழக்கமில்லாத ஒன்றல்ல.

சிறையும் எனக்கு பழக்கமானது. மக்களுக்காக நான் அனைத்தையும் அனுபவித்தவன் என்பதை அனைவரும் அறிவர்.

பலர் தோல்விகளுக்கு பழகி இருந்தாலும் நேர்மையான தலைவருக்கு மாத்திரமே கௌரவமான வெற்றியின் உரிமையாளராக முடியும் என்பது எனது நம்பிக்கை.

நான் அந்த மகத்தான வெற்றியையும் அனுபவிக்க சந்தர்ப்பத்தை பெற்றவன். புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மரண அச்சத்தில் இருந்து காப்பாற்றினேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உலக ஆச்சரியம் கொள்ள செய்யும் வெற்றியை பெற முடிந்தது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

சிறந்த நோக்கங்களுடனான கூட்டணிக்கு மாத்திரமே நாட்டுக்கும், மக்களுக்கும் மீண்டும் அப்படியான வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும்.

அப்படியான வெற்றியான நோக்கை கொண்டுள்ள நுகேகொடையில் கூடியிருக்கும் மக்களின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறேன்.

தோல்வியடையாத எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போயிருந்தாலும் சகலரது படகும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே என மகிந்த ராஜபக்ச வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தை தயான் ஜயதிலக்க வாசித்தார்.

Post a Comment

0 Comments