நாட்டின் தற்போதைய முழுக்கடன் 9.6 ட்ரில்லியன் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் எதிர்கால பயணம் எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கைக்கான அமெரிக்காவின் வணிக சபை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, எமது நாட்டின் பொருளாதாரக் கடன் 7.9 ட்ரில்லியன் எனவும் ஒட்டு மொத்தக் கடன் 9.6 ட்ரில்லியன் எனவும் இந்தக் கடன் சுமையை வெளிநாட்டு முதலீகளினால் ஈடு செய்துகொள்ள முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


0 Comments