பதில் நிதி அமைச்சராக பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க, உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்
கொண்டு நாடு திரும்பும் வரையில், நாட்டின் பதில் நிதி அமைச்சராக கபீர்
ஹாசீம் கடமையாற்ற உள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் நிதி அமைச்சுப் பொறுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கீழ் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments