Subscribe Us

header ads

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை - இராணுவம்



ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். 

முன்னரைப் போலவே ஓமந்தை இராணுவ முகாம் அவ்விடத்தில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார். 

ஆனால் யுத்த காலத்தை போன்று அல்லாமல் அதனை சோதனை நடவடிக்கைகளில் தளர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். 

அதன்படி ஓமந்தை ஊடாக பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments