ஐக்கிய தேசிய கட்சியில் தற்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களை தவிர மற்றைய அனைவரும் திருடர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவர்கள் கூறுவதை பார்க்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் நியமிக்கப்பட்டிருக்கம் உறுப்பினர்களை தவிர நாங்கள் அனைவரும் திருடர்கள்.
நல்லாட்சியை அமைப்பதற்கு முயற்ச்சித்தவர்களை திருடர்களாக்கிவிட்டு திருடர்கள் நல்லாட்சியை மேம்படுத்த நாடகமாட முயற்சிப்பதாக கேள்வி ஒன்றும் உள்ளது.
நான் அமைச்சராக செயற்பட்ட காலங்களில் அதிகாரபூர்வமான வீடுகளோ அதற்கான பணமோ அரசாங்கத்தில் பெற்றுக்கொண்டதில்லை.
சிரமமான காலகட்டங்களில் கூட நான் பாதுகாப்பாளர்களை அழைத்துக்கொண்டு பயணிக்கவில்லை.
அதோடு நான் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் இருந்துக்கொண்டு வருமான வரி செலுத்தியுள்ளேன்.
தற்பொழுது எங்கள் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்று இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.


0 Comments