உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் (பி பிரிவு) மோதின. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 62 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்த சிகும்புரா தலைமையிலான ஜிம்பாப்வே அணி முதலாவது வெற்றியை பதிவு செய்யும் வேட்கையுடன் களமிறங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 285 ரன்கள் குவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 285 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சைமான் அன்வர் 67 ரன்கள் எடுத்தார். குர்ரம் கான் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களும் தங்களது பங்குக்கு போதுமான ரன்களை அணிக்கு சேர்த்தனர். இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து விளையாடியது. ஜிம்பாப்வே 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணியில் வில்லியம்ஸ் அதிகப்பட்சமாக 76 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். சிகந்தர் ராசா 46 ரன்களும், டெய்லர் 47 ரன்களும், எர்வின் 42 ரன்களும் எடுத்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் தாகிர் 2 விக்கெட்களையும், நவீத், ஜாவித், அஜிஸ் மற்றும் சந்திரன் தலா ஒருவிக்கெட்களை கைப்பற்றினர். ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
0 Comments