அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,
எமது அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல
விளையாட்டுப் போட்டியினை எதிர்வரும் 24.02.2015 அன்று நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டுவந்த இல்ல
விளையாட்டுப்போட்டிகள் அண்மைய காலங்களில் கலையிழந்திருப்பதனை காணக்கூடியதாக
உள்ளது. எனவேதான், மீண்டும் சிறப்பானதொரு இல்ல
விளையாட்டுபோட்டியினை நடாத்தும் பொருட்டு அல் அக்ஸா நிர்வாகம் இவ்வருட இல்ல
விளையாட்டுப்போட்டியை நடத்தும் ஏற்பாட்டு பொறுப்புகள் யாவற்றையும் பழைய மாணவர்
சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.
இதன் நிமித்தம் அல் அக்ஸாவின் பழைய மாணவர்களாகிய நாம்
கல்லூரியின் விளையாட்டுத்துறையின் நலன் கருதி இந்நிகழ்வினை வெகு சிறப்பாக
நடாத்துவதற்கு எத்தனித்து வருவதோடு அதற்காக வெளிநாடுகளில் வாழும் எமது
சகோதரர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.
தயவு செய்து நமது அல் அக்ஸாவின் புகழை வான் ஒங்கச்செய்யும்
இந்நிகழ்வுக்கு தங்களால் ஆனா உதவிகளை எதிர்வரும் 18.02.2015 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக
அனுப்பி வைக்கும் படி கேட்டுகொள்கின்றோம். செயலாளர் பழைய மாணவர் சங்கம் அல்
அக்ஸா தே.பா.
(Old Boys Association-Al
Aqsa N.S) BOC Kalpitiya branch.
Account no- 76131626


0 Comments