Subscribe Us

header ads

ஸ்ரீ.ல.மு.கா. உறுப்பினர் ஜெமீல் மன்னிப்புக் கோரி, மீண்டும் கட்சியில்


கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் இன்று கட்சியிடம் மன்னிப்புக் கோரியதாகவும், இதனையடுத்து அவர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் சற்று முன்னர் அறிவித்தார்.
தற்பொழுது அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இன்று காலை தன்னைச் சந்தித்த குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார். இதனையடுத்து கட்சி மீண்டும் அவரைச் சேர்த்துக் கொள்வதாக தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஸ்ரீ.ல.மு.கா. இன் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் உடனடியாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று கட்சி அறிவித்திருந்தது.
கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments