Subscribe Us

header ads

மாகாண சபை உறுப்பினா் நியாஸ் தலைமையில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள்


வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸூக்கு வழங்கப்பட்ட விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சுயதொழில் மற்றும் வீட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, ஆனமடு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இவ்வுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்ட உதவி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலாவி பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புக்கள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச். எம். நியாஸினால் வழங்கப்பட்டன. தனது விஷேட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மக்களுக்கான இவ்வாறான சேவைகள் எல்லா பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் உபகரணங்களும் வழங்கப்படும் எனவும் இதன் போது மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.










Post a Comment

0 Comments