Subscribe Us

header ads

பாலமுனை அல் அக்ஷா வித்தியாலயத்தைச் சேர்ந்த வறிய மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வசமாக வழங்கி வைக்கப்பட்டன.

பி. முஹாஜிரீன்


பாலமுனை ஜம்மியதுஸ் ஸஹ்வா அல்கைரிய்யா (ஜெஸ்கா) நிறுவனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச்திற்குட்பட்ட நெய்னாகாடு அல் அக்ஷா வித்தியாலயத்தைச் சேர்ந்த வறிய மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வசமாக வழங்கி வைக்கப்பட்டன.

பின்தங்கிய பிரதேசமான நெய்னாகாடு கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20) நெய்னாகாடு அல் அக்ஷா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் எ.ஆர். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜெஸ்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்எச்.எம். ஹியாஸ் (மதனி), ஜெஸ்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மௌலவி எம்.எஸ்.எம். அர்ஸத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.





Post a Comment

0 Comments