Subscribe Us

புத்தளத்துக்கு மீண்டும் சத்திய சோதனை !

பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் வியூகம் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC)தெரிவித்துள்ளது. இன்று கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அதன் தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாக ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இரு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் நீடிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிட முடியுமே என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது சில பிரதேசங்களில் அவ்வாறு கேட்க முடியும். என்றாலும் அவ்வாறு செய்யும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரசும் (ACMC) தமது கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவர் என எதிர்பார்க்கலாம்.

அதேவேளை ஜனாதிபதி அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படுவதும் உறுதி.

நமக்குப் பழகிப்போன வழமையான தேர்தல் வியூகமும், ஆறு பொதுத் தேர்தல்களில் நாம் படித்த பாடமும் மீண்டும் தொடரப் போகிறதா ? இந்த நிலையில் தேர்தலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேடித் போய் தோற்றுப் போவது உண்மையில் வேட்பாளர்களா ? அல்லது அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களா ? ஒன்று மட்டும் உண்மை புத்தளத்துக்கு மீண்டும் சத்திய சோதனை தான்.

-Muhsi Rahmathullah-

Post a Comment

0 Comments