(மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்)
முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான மயோன் முஸ்தபா அவர்கள் எதிர்வரும் 16ம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்ப உள்ளதாக All Indian Institute of Management Studies இன் இலங்கை பிரதிநிதியும், கவிஞரும், எழுத்தாளரும், ஐக்கிய தேசிய கட்சியில் முன்னால் கொத்தணி அமைப்பாளருமான மருதுார் ஹசன் அவர்கள் தெரிவித்தார்கள்.
நாடு திரும்பும் கௌரவ மயோன் முஸ்தபா அவர்கள் ஐ.தே.கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அவர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு ஆதரவாக வாக்களித்து அவரை ஐக்கிய தேசிய கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்த மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments