அவசர தகவல் அனைவரும் பகிருங்கள்…!
எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!! நேற்று முதல் பலருடைய முகநூல்
கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை
அக்குஹீலர்.அருண்குமார் அவர்களுடைய கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது. ஹாக்
செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு
வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல
நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக்
ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள்.
(இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)
இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.
# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert
when anyone logs into your account from a new device or browser. ->
அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த
நண்பர்கள் மூலம் திரும்ப பெறலாம். Settings -> Security Settings ->
Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள் வரைக்கும் தேர்வு செய்ய
முடியும். உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த ஐந்து
நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள் அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த பதிவும் உங்கள்
டைம்லைனில் தெரியாது. Settings -> Timeline and Tagging Settings ->
who can add things to my timeline? -> Review posts friends tag you in
before they appear on your timeline? -> ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில் வரும் வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
எனக்கு தெரிந்த அளவு செட்டிங் கொடுத்துள்ளேன் மேலும் விளக்கம் தெரிந்தார்கள் கமெண்ட்ஸ் செய்யுங்கள். நன்றி.
NEW UPDATE:
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான் பேசிய வரைக்கும், அவர்களுடைய
கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில் இருந்து Log-out செய்யவோ, அந்த
பதிவுகளை நீக்கவோ, அல்லது சில மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை. ஆனால்,
வேறொரு கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்ற முடிகிறது.
எனவே ஹாக்கர் உங்கள் Browser Cookies மூலமே உங்கள் கணக்கை ஹாக் செய்வதாக
நினைக்கிறேன். முடிந்த அளவு Browser Settingsல் Remember password எடுத்து
விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது Clear
History கொடுத்து Browser Cookies உட்பட அழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில்
ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும் போது தானாகவே History Cleaning
செயும்படி இருக்கிறது. முடிந்த அளவு அதையும் பயன்படுத்தலாம். நன்றி.


0 Comments