ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு அரபு நாடுகள் உதவ வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜெர்மனியில் 51 ஆவது வருடாந்த மூனிச் பாதுகாப்பு மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, இரண்டு நாட்கள் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அரபு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஐ. எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சி குறித்தும், அவர்களைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அரபு நாடுகள் உதவ வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் அப்போது வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோள்களை அரபு நாடுகள் ஏற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு உதவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன


0 Comments