இலங்கையின் அப்பம் மிகவும் சுவையான உணவு என தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த தான் முதல் முறையாக அப்பம் சாப்பிட்டதாக பிஸ்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதுடன் அது மிகவும் சுவையானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று முன்தினம் இராப்போசனத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.


0 Comments