துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாக, துறைமுக மற்றும் கடற்படை, விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
அமைச்சரவை நேற்று கூடியபோதே இவ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்களது நலன்புரி நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று துறைமுக அதிகார சபைக்குச் சென்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்


0 Comments