ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட ஷர்பத் பிபி என்ற பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985-ஆம் ஆண்டு 'நேஷனல் ஜியோகரபி இதழில் அட்டைப் படமாக வெளி வந்தது உலக புகழ் பெற்றது. இப்படம் 1980-இல் ஆப்கானிஸ்தான் நிலை மற்றும் உலக முழுவதுமிருக்கும் அகதிகளின் நிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவளின் கடல் பச்சை வண்ணக் கண்களும் அது சொன்னச் செய்தியும் உலகத்தை கவனிக்க வைத்தது. அந்த கண்களுக்கு பின்னே உறைந்துக் கிடந்த துயரம் அன்றைய ஆப்கானின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. "ஆப்கன் மோனலிஷா" என்று அழைக்கப்பட்ட இப்படத்தை எடுத்தவர் 'ஸ்டீவ் மெக்கரி புகழ்ப்பெற்ற நேஷனல் ஜியோகரபி புகைப்படக்காரர் ஆவார்.
அந்த பெண்ணின் பெயர் ஷர்பத் பிபி இவர் தோரா போரா மலைப்பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.சோவியத் ஆப்கான் போரின் போது தன் ஆறு வயதில் சோவியத்தின் குண்டுகளுக்கு தன் பெற்றோர்களைப் பலி கொடுத்துவிட்டு, தன் சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளோடு உயிர் பிழைக்க பனி மலைகளை கடந்து எல்லைத்தாண்டி பாகிஸ்தான் முகாம்களில் அடைகலம் அடைந்தவர் ஆவர்.இவர் ரஹ்மத் குல் என்பவரை திருமணம் செய்து உள்ளார். 2002-இல் போட்டா கிராபர் 'ஸ்டீவ் மெக்கரி அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்து மீண்டும் புகைப்படம் எடுத்தார்.
இந்த ஆப்கான் பெண்ணிற்கு தற்போது பாகிஸ்தான் அரசு தேசிய அடையாள அட்டை வழங்கி உள்ளது. ஷர்பத், அவரது கணவர் ரஹ்மத் , ஷ்ர்பத்தின் மகன்கள் வலிகான்,ரவுப்கான் ஆகியோருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கி உள்ளது. இது அங்கு சர்ச்சையையை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு எவ்வாறு பாகிஸ்தான் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது என சர்ச்சை வெடித்து உள்ளது. தேசிய அடையாள அட்டை மனுவில் ஷர்பத் பெசாவரில் பிறந்ததாக குறிப்பிடபட்டு உள்ளது.இவை அனைத்தும் போலியாக தரப்பட்டு அவருக்கு அடையாள அட்டை வழங்கபட்டு உள்ளது.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய தகவல் மற்றும் பதிவு அதிகாரிகள் ஒரு பெண் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளனர்.இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடபட்டு உள்ளது.மேலும் ஷர்பத் குடும்பத்தின் அடையாள அட்டையும் தடுக்கப்பட்டு உள்ளன.
0 Comments