Subscribe Us

header ads

கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்க தீர்மானம்


இலங்கையில் புதிய ஜனநாயக வெற்றியை பாதுகாப்பதற்காக அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக நிவ்யோர்க் பல்கலைக்கழக சட்டம் மற்றும் அரச அறிவியல் பேராசிரியர் ரயன் குட்மண் தெரிவித்துள்ளார். 

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கடிதம் ஒன்றினை முன் வைத்திருந்தார். குறித்த கடிதத்தில் 2009ஆம் ஆண்டு தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டில் சர்வாதிகாரமான ஆட்சியை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை ஜனாதிபதி தேர்தல் மூலம் தோற்கடித்தமையை இலங்கையர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு தசாப்தத்தின் பின்னர் இலங்கையர்களுக்கு புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியில் ஊடக சுதந்திரம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மத சிறுபான்மை இனங்கள் மற்றும் இனக்குழுக்களின் உரிமைகள் பாதுகாப்பதென்றால் தோல்வியடைந்த ராஜபக்ச ஆட்சி மீண்டும் நடைமுறைக்கு வராமல் தடுப்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு சவாலாக அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்க அமெரிக்காவினால் நடவடிக்கை மேற்கொள்ள பேராசிரியர் குட்மண் தீர்மானித்துள்ளார்.

ஆகவே அமெரிக்க குடிமகனான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக 1996 போர் குற்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக அதில் ராஜபக்சர்களின் திட்டங்கள் வீழ்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ரயன் குட்மன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments