Subscribe Us

header ads



தனக்கு சவாலாக தனது கட்சியினைச் சேர்ந்த ஒருவர் வரக் கூடாது என்பதற்கான அமைச்சர் ஹக்கீம் முதலமைச்சினை தனது பெறுவதனை விட்டும் தடுக்க சில காய் நகர்த்தல்களை செய்து வருவதாக மு.கா அல்லாத பலர் குறை கூறி வந்தனர்.ஆனால்,மு.கா முதலமைச்சினைப் பெற்று அதனை நசீர் ஹாபிஸ் இற்கு வழங்கியுள்ளமை இதற்கு போதுமான பதிலை வழங்கி இருந்தது.

தயா கமகே இன் விமர்சனம் இதற்கு மேல் ஒரு படி சென்று இவ் விமர்சனவாளர்களுக்கு மு.கா தலைவர் முஸ்லிமைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வர எந்தளவு முயன்றுள்ளார் என்பதனைக் காட்டுகிறது.தயா கமகே கூறும் போது “அமைச்சர் சிங்கள இனத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வார விரும்பவில்லை.அவர் ஒரு இனவாதி” எனக் கூறியுள்ளார்.இனவாதி எனும் வார்த்தை அவர் தமிழ் இனத்தினைச் சேர்ந்த ஒருவரும் முதலமைச்சராக வார விரும்பவில்லை என்பதனைக் காட்டுகிறது.அப்படியானால்,அவர் முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வரவே விரும்பியுள்ளார் என்பதனை தயா கமகே உறுதி பட மக்களுக்குப் தெளிவாக்குகிறார்.

எனவே,இப்படியானர் மீது தனது கட்சியினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வர விரும்பாமல் தடுக்கிறார் என்ற விமர்சனம் எவ்வளவு கீழ்த் தரமானது..??

தயா கமகே அவர்களே..!

நீங்கள் அமைச்சர் ஹக்கீம் சிங்கள இனத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வர விரும்பவில்லை என்கிறீர்.இவ் முதலமைச்சினை சு.க தலைமை தான் மு.கா இற்கு அதிக பிரயத்தனம் செய்து வழங்கியுள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது.சு.க தலைமை சிங்கள இனத்தினைச் சேர்ந்தது தான்.நீங்கள் எவ் இனம் வராமல் ஹக்கீம் தடுக்கிறார் என்றீரோ அவ் இனமே மு.கா இற்கு முதலமைச்சினை வழங்கி அழகு பார்த்துள்ளது.அமைச்சர் ஹக்கீம் சிங்கள இனத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதைத் தடுக்கவில்லை நீங்கள் முதலமைச்சர் ஆவதற்கு தடையாக இருந்தார் என்று சொல்லுங்கள்.நீங்கள் என்ன நிறுவல் கொண்டு முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கிறீர்கள்.?? இம் முதலமைச்சானது ஏற்கனவே மு.கா,சு.க செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மு.கா இற்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை எவ்வாறு நீங்கள் கேட்கிறீர்..? 4 ஆசனங்களினை மாத்திரம் கொண்ட உங்கள் கட்சிக்கு எவ்வாறு முதலமைச்சினை வழங்குவது..?? இது என்ன வகையில் நியாயம்.??

நீங்கள் கூறுவது போன்று இனவாதம் பார்க்கப்பட்டு முதலமைச்சு எங்குமே வழங்கப்படுவதில்லை.அவ்வாறு வழங்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் அதிக சதவீதத்தில் வாழ்கின்ற அடிப்படையில்,அதிக உறுப்பினர்களினைக் கொண்டிருப்பதன் அடிப்படையிலும் முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்படல் வேண்டும்(புள்ளி விபரங்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழ்வதாக குறிப்பிட்டாலும் அவ்வளவு பாரிய வித்தியாசம் அல்ல.).இது மு.கா இனது அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி.நீங்கள் முயற்சி செய்தால் அடுத்த தேர்தலில் உங்களுக்கு இப் பதவி கிட்டலாம்.அதை விட்டு விட்டு இப்படி கேவலமான அரசியல் செய்ய வேண்டாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

Post a Comment

0 Comments