ஆதிப் அஹ்மத்
புத்தளம், ரத்மல்யாய அரபா நகர் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் ஆசிரியை மஹ்ரூப் மஹனாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான எம். ஹிஜாஸ் காசிம் மரைக்கார், ரத்மல்யாய இளைஞர் தொண்டு சேவை அமைப்பின் ( YCS ) தலைவரும் ஆசிரியரும், சமாதான நீதவானுமாகிய ஜபறுல்லா சிபாத் உள்ளிட்ட YCS அமைப்பின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்கள் பல்வேறு பொருட்களினை விற்பனை செய்ததுடன் மாணவர்களின் பெற்றோர் அவர்களுக்கு ஊக்கமும் அளித்தனர்.-Puttalam Online-





0 Comments