Subscribe Us

பைசர் முஸ்தபா ராஜினாமா!


சில நாட்களாக இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இராஜினாமா செய்யப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வந்திருந்த நிலையில் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார் பைசர் முஸ்தபா. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அவர், சிறிலங்கன் விமான சேவையின் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தன்னால் சுயாதீனமாக இயங்க முடியவில்லையென குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு வேறொரு அமைச்சினை ஜனாதிபதி வழங்க முன் வந்ததாகவும் கடந்த வார அரசியல் தகவல்கள் தெரிவித்திருந்தன. புதிய அரசிலிருந்து விலகிக்கொள்ளும் முதலாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments