அஸ்ஸலாமு அலைக்கும்.


இலங்கையில் உம்ரா சேவை தடை செய்யப்பட்ட ஒர் உம்ரா முகவர் நிறுவனம் மற்றுமொரு உம்ரா முகவர் நிறுவனத்திடம் வீசா கொள்வனவு செய்து ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வரை அறவிட்டு உம்ரா செய்வதற்காக சென்ற கிழமை 2 ஆண்களையும் 4 பெண்கலையும் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி அவர்களை ஏற்க எவரும் வராத நிலையில் நிர்கதிக்குள்ளாக்கப்பட்ட நிலமை யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள அந்த ( பொது பல சேணாவிடம் நீதி கேட்டு சென்ற ) உம்ரா முகவர் நிலையம் இங்கு மக்காவில் முன் கூட்டியே உம்ராவுக்காக அழைத்து வந்துல்ல மற்றுமொரு உம்ரா குழுவை தொடர்பு கொன்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிர்கதிக்குள்ளாக்கப்பட்ட வர்களை ஒப்படைத்துள்ளனர்.

தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் மூன்று நேர உணவுக்காக ஒருவரிடம் ஒரு நாளைக்கு 25 ரியால்கள் வீதம் அறவிடப்பட்டிருந்தன.

இந்த ஆறு பேரும் தனது உம்ரா கடமைகளை தனியாகவே நிறைவேற்றியுள்ளனர்.

இவர்களுக்கு எந்த வித வழி காட்டல்கள்களும் கொடுக்கப்படவில்லை.

இது பற்றி சவுதி அரேபியாவில் உள்ள உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சிலும், ஜெத்தாவில் உள்ள இலங்கையின் துனை தூதரகத்திலும் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட உம்ரா ஹஜ் முகவர்களினால் இலங்கையில் உள்ள நேர்மையான உம்ரா முகவர்களின் நற் பெயருக்கும் களங்கம் விளைவிக்கின்றார்கள்.

இன்று பாதிக்கப்பட்டவர்கள் நாடு திரும்பும் தருவாயில் விமாண நிலையத்தில் கூட எதுவித வழிகாட்டல்களோ அல்லது உதவிகளோ இருக்கவில்லை.

அந்த சமயத்தில் நானே அவர்களுக்கு விமாண நிலையத்தில் வைத்து தேவையான உதவிகளை செய்து கொடுத்து வழி அனுப்பி வைத்தேன்.

ஜித்தா விமாண நிலையத்திலிருந்து மாவனல்லை ரிழ்வான் ஹனீபா

மேல் குறிப்பிட்ட சம்பவங்கள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது அறிந்ததே. இது தொடர்பில் நாம் உரிய ஆதரங்களுடன் முஸ்லிம் கலாச்சார அமைச்சுக்கு அறிவிக்க உள்ளதுடன் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க விஷேட வேண்டுகோள் ஒன்றையும் விடுக்க உள்ளோம்.

குறிப்பிட்ட சம்பவத்தை பகிர்ந்து கொண்ட ஜித்தா விமாண நிலையத்தில் முக்கிய பதவி வகிக்கும் மாவனல்லை ரிழ்வான் ஹனீபா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் அநீதிக்கு எதிரான உங்கள் சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம்.