தனக்கு பைஸர் முஸ்தபாவுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு அவருடனும் அவருக்கு என்னுடனும் எவ்வித கோபங்களோ, முரண்பாடுகளோ இல்லை. பைஸர் முஸ்தபா பதவி விலகியது, தான் வழக்கறிஞராக தொடர்ந்து செயற்படுவதற்கே.

மேலும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிககை தொடர்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அடைய முடியாது. அதற்கு இன்னும் காலம் உள்ளது.

எங்களுக்கு கடந்த அரசாங்கத்தை போன்று பழிவாங்க முடியாது. சட்ட ரீதியான முறையில் செயற்படவே முடியும். அதுவே அவசியமான ஒரு செயற்பாடாகும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.