அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
100க்கும் குறைந்த மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் மாத்திரமே தற்போது மதிய உணவு வழங்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைக் கல்வியைத் தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவை வழங்கும் திட்டத்தை கட்டங்களாக முன்னெடுக்கவுள்ளமாக அவர் கூறினார்.
பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கையில் தற்போது பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அக்கில விராஜ் காரியவசம் மேலும் கூறினார்.


0 Comments