துறையில் துப்புரவு தொழிலாளியாக இணைவதற்கு க.பொ.த (சா/த) கல்வித் தகைமை கோரப்படுகின்றது. ஆனால் நாட்டை நிர்வகிக்கும் பாராளுமன்றத்தில் உள்ள 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்கள்.
இது எந்த விதத்தில் நியாயமாகும் என கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சி, எத்தனோல் ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பாராளுமன்றம் அனுப்பும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டுமென்றும் அக்கட்சி தெரிவித்தது.
இது தொடர்பாக ஐ.தே.கட்சி மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மேலும் தகவல் தருகையில், இன்று எமது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 உறுப்பினர்கள் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தி
பெறாதவர்கள்.
அதேபோன்று 142 உறுப்பினர்களில் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்றவர்களும் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லாதவர்களும் அடங்குகின்றனர்.
நாட்டில் 2 கோடி மக்களின் நிதி நிர்வாகம் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்கும் உயரிய இடமான பாராளுமன்றத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
அரச துறையில் துப்புரவு தொழிலாளியாக இணைவதற்கு க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் நாட்டை நிர்வகிக்கும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் 94 பேர் சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாதவர்கள்.
இது எவ்விதத்தில் நியாயமாகும்? அது மட்டுமல்லாது எத்தனோல் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் எந்தவிதமான அரசியல் ஞானமும் இல்லாதவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்.
இதற்கு நாட்டு மக்கள்தான் காரணம். அவர்கள் தமது வாக்குகளை வழங்கியே இவ்வாறான நிலைமையை ஏற்படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தேர்தல்களில் வாக்களிக்கும் போது மக்கள் சிந்திக்க வேண்டும். படித்தவர்கள் பண்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும்.
படித்தால் மட்டுமே அரசியலில் சாதிக்க முடியும் என நான் விவாதிக்கவில்லை. டி.எஸ். சேனாநாயக்க, பிரேமதாஸ போன்றவர்கள் கல்வியில் மேதாவிகள் அல்லர்.
ஆனால் பண்பாளர்கள். மக்கள் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டவர்கள். அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியர்கள். அவ்வாறானவர்களே தேவைப்படுகின்றார்கள்.
எனவே, எதிர்காலத் தேர்தல்களில் புதிய மாற்றங்களுக்கு மக்கள் வித்திட வேண்டும் என்றும் புத்திக பத்திரண எம்.பி. தெரிவித்தார்.

0 Comments