சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களால் 54 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச ஒன்றியம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக ஸ்ரீலங்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால் 10.7 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா 112ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments