இலங்கையைப் பொறுத்தவரையில் முழு நாட்டினதும் அல்லது பிரதேசவாரியான
அரசியல் தேவைப்பாடுகள் துல்லியமாக வரையறுக்கப்படாத நிலையில் அரசியல்
பிரதிநிதித்துவ சிந்திப்பு என்பது அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமது
கட்சியின் தலைமையில் தமது பிரதிநிதிகளுக்கான தொழிவாய்ப்பாகவே கருதப்
படுகின்றது. மாற்றமாக தேசிய பிராந்திய ரீதியாக குடிமக்களின் தேவைகள்,
உரிமைகள், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான சிந்திப்பு, அல்லது
அத்தகைய கேள்வி, நிரம்பல் என்பன இலங்கை அரசியல் மைய சிந்திப்பில் இல்லை.
உதாரணமாக அரசியல் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான
நோக்கமாக பாராளு மன்றங்களில் ஆட்சியைக் கைப்பற்றல் உள்ளது. இலங்கை மக்களின்
சுதந்திரம், பாதுகாப்பு, கௌரவம் என்பற்றைப் உறுதிப்படுத்தல் என்பது
மேற்குறிப்பிட்ட பிரதான இலக்குக்கு வெளியில் துணை இலக்குகளாகவே
இக்கட்சியால் கருதப் படுகின்றன. விளைவாக ஆட்சிக்கு வருவதற்கான அனைத்து
உத்திகளும் ஆகுமானதாக இக்கட்சி கருதுகின்றது. அநோகமாக இக்கட்சி மக்களின்
வாக்குகளைக் கொள்வணவு செய்வதற்கு ஏற்ற எந்த ஒழுங்கு குறித்தும்
சிந்திக்கும். அவ்வொழுங்கு குடிமக்களின் பாதுகாப்பு, சுதந்திரம், ஏனைய
சமூகப் பொருளாதார தேவைகளை உறுதிசெய்வதற்கான தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும்
என்ற அவசியப்பாட்டை முதன்மைப்படுத்தவில்லை.
அடுத்த பிரதான கட்சியான சுத்ந்திரக் கட்சியால் இப்படி ஒரு இலக்கைக் கூட பொதுத் தளத்திதல் முன்வைக்க வில்லை.
இப்படியிருக்கு பொதுமக்கள் தமது அரசியல் தேவைகளை இணங்கண்டு அவற்றிற்கான
உத்தரவாதங்களை ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி பெற்றுக்
கொள்ளும் ஒழுங்கை ஏற்படுத்துவதன் மூலம் அழுத்தும் கொடுக்க முயற்சிப்பதே
கிட்டிய காலத்தில் சாத்திய மானது. இத்தகைய ஒரு மக்கள் சக்தி (People Power)
இனத்துவம் சாராமல் பன்மைத்துவ அடிப்படையில் இருக்கும் போது அரசியல்
வாதிகள் மேல் அம்மக்கள் சக்தி கொடுக்கும் அழுத்தம் வீரியம் மிக்கது.
அவ்வாறில்லாமல் இனத்துவச் சாயலைப் பூசுவது இருக்கின்ற சக்தியை இல்லமாலாகி
மலட்டுத்தன்மையைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். குறிப்பாக சிறுபான்மை
சமூகத்தின் அத்தகைய செயற்பாடு தற்கொலைக்குச் சமனானது. முஸ்லிம்களைப்
பொறுத்தவரையில் இப்போக்கு அனைத்து மக்களுக்கும் அருளாக முஸ்லிம்
செயற்படவேண்டும் என்ற இஸ்லாத்தின் சமூகநோக்குக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு
நடைமுறையாகும்.
(உதாரணமாக, புத்தளத்தில் வாழும் அனைத்து
மக்களுக்குமான அரசியல் தேவையை முதன்மைப் படுத்தியாதாக புத்தளம் மக்களின்
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படாத போது, குறிப்பாக சிறுபான்மை
மக்களுக்கான வெறும் அரசியல் பிரதிநிதித்துவ சிந்திப்பை முன்வைப்பு,
புத்தளத்து முஸ்லிம் சமூகம் புத்தளம் மக்களுக்கான அருளாக இருப்பதனை
மறுதலிக்கின்றது. மாற்றமாக இனத்துவேச அரசிலலுக்கு அது நெருப்பு
மூட்டுகின்றது.


0 Comments