Subscribe Us

header ads

பூனை சிலை 52 லட்சத்துக்கு ஏலம்


எகிப்து நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை சிலை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை வைத்திருந்த டக்ளஸ் லிட்டல் என்பவர், 2003-ம் ஆண்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கு அந்த சிலையின் அருமை தெரியவில்லை.

எனவே, குப்பையில் போடுவதற்கு தயாராகி விட்டனர். அது, ஒரு ஏல மையதாரரின் பார்வைக்கு சென்று, ஏலத்தில் வைக்கப்பட்டது. ரூ.10 லட்சம் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்து மடங்கு அதிகமாக, ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. பிரபல லண்டன் வர்த்தகர் ஒருவர் அதை ஏலத்தில் எடுத்தார்.

Post a Comment

0 Comments