விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 1989 ம் ஆண்டு முதல் 2010 நடந்த பாராளுமன்ற தேர்தல் வரை தேசிய காட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி போன்றவற்றில் போட்டியிட்ட நமது வேட்பாளர்கள் 1000 முதல் 5000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருக்கின்றார்கள்.
நமது மாவட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு அமைய இரண்டு கட்சிகளிலும் அக்கட்சிகளது கடைசி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருப்பது சுமார் 30000 முதல் 35000 வரையிலான வாக்குகளிலாகும்.
ஆனால் ஒவ்வொரு முறையும் நமது வேட்பாளர்கள் இந்த தொகையின் இறுதியாக வெற்றிபெற்ற வேட்பாளருக்கு அடுத்தபடியான வாக்குகளையே பெற்று வருகின்றனர். இது சில நேரம் இறுதியாக வெற்றிபெருகின்ற நிலைமை வருகின்ற போதும் தெரிவு வாக்குகளின் குளறுபடிகளினால் தோல்வியை தழுவிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
கடந்த அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் நமது சிறுபான்மை வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களோடு சேர்ந்து, தாங்களாகவே முயன்று பெற்றெடுத்த வாக்குகள் பாராளுமன்றத்தின் வாசல் வரை அவர்களை கொண்டு சென்றிருக்கிறன. அதற்கு புரம்பாக சமூக ரீதியாக அவர்களில் அனைவரையும் அல்லது அவர்களில் ஒருவரையாவது வெற்றிபெறச் செய்வதற்கான எந்தவித முன்னெடுப்புக்களையும் நமது சமூகம் செய்யவில்லை.
சமூக ரீதியாக அவ்வாறான முயற்சி ஒன்றை மேற்கொண்டு இன்னும் 5000 வாக்குகளை மேலதிகமாக பெற்றுக்கொடுத்திருப்போமேயானால் ஒவ்வொரு முறையும் ஆளுங் கட்சி மற்றும் எதிர்கட்சிகளில் பிரதிநிதிகளை பெற்றிருக்க முடியும். அல்லது ஆளுங் கட்சியிலாவது தொடர்ந்து ஒரு பிரதிநிதியை பெற்றிருக்க முடியும்.
ஆனால் ஒரு வகையான இயக்கவாத மனோபாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்ற நம்மில் சிலரின், எல்லோரையும் தோற்கடித்து தமது எதிர்காலத் தேவைக்காக அதை வெற்றிடமாகவே வைத்திருந்த சுய இயக்க நல சிந்தனையும், படித்தவர்கள் பலரின் அக்கறையற்ற நிலையம், பாமரர்களின் பொடுபோக்கும் வெறும் 5000 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுக்கொடுக்க முடியாமல் நாம் அரசியலில் அநாதை சமூகமாகவே இருந்து வருகின்றோம்.
ஆகவே சமூகம் சார் முயற்சிகளின் ஊடாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு இன்னும் 5000 வாக்குகளைப் பெற்றுகொடுத்தாலே இரண்டு கட்சிகளிலும் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெறமுடியும்.
அல்லது ஏதாவது ஒரு கட்சியில் போட்டியிடுகின்ற மாவட்ட ரீதியில் தனக்கென ஒரு வாக்கு வங்கியினை வைத்திருக்கின்ற வேட்பாளர் ஒருவருக்கு அந்த 5000 வாக்குகளை பெற்றுக்கொடுக்கின்ற போது அவரை நாம் பாராளுமன்ற உறுப்பினராக பெற்றெடுக்க முடியும்.
எனவே தனிக்குழு அமைத்து அத்தனை பேரும் கூட்டு சேர்ந்து 35000 ஐயும் விட கூடிய வாக்குகளைப் பெறுகின்ற முயட் கொம்புக்கு பதிலாக சமூகம் சார் 5000 வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கின்ற வேலையை செய்வது இலகுவானதும், புத்திசாலித்தனமானதுமான வேலைத்திட்டமாகும்.
இயக்கவாத, பொடுபோக்கு, அறிவீனம், போட்டிப்பொறாமை என்று சீரழிந்ததை படிப்பினையாகக் கொண்டு அந்த தவறுகளிலிருந்து மீண்டு புதிதாக சிந்திப்பதற்காக முயற்சிப்போமாக.
"ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாமல், அல்லாஹ்வும் அந்த சமூகத்தை மாற்றியமைக்கப் போவதில்லை" (அல்குர்ஆன்)
-Mohamed Azwar-


0 Comments