கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் வசந்த சமரசிங்கவிடம் மூன்று நாட்களாக 20 மணித்தியாலங்கள், புலனாய்வுப் பிரிவினர் சாட்சியங்களை திரட்டியுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பல முக்கியஸ்தர்கள் தொடர்பில் வசந்த சமரசிங்க அண்மையில் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளன.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் பற்றியும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான சாட்சியங்களை தாம் வழங்கியதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 Comments