1. கற்பிட்டி வன்னிமுந்தல் அருகே மிக பழமையான 80
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம்
கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. கற்பிட்டியை சேர்ந்த மாணவன் ஒருவன் தன் வீட்டு மொட்டை மாடியில் பழங்கால பயிர்களை பயிரிட்டு சாதனை .(அரிசி. கம்பு. சோளம். )
3. செவ்வாய் கிரகத்தில் கற்பிட்டி மக்கள் அனைவரும் ஹஜ்ஜுப் பெருநாள் கழியாட்ட நிகழ்வுகளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
4. கற்பிட்டி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த புத்தளம் மீன் பிடி ரோபோக்களை கற்பிட்டி மீன் பிடி ரோபோக்கள் சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழுதடைந்தன.
5. கற்பிட்டியில் அதிக (50) வருடம் உயிர் வாழ்ந்த மூசீன் (கற்பனை பெயர்) கின்னஸ் சாதனை . .
6. நேற்று இரவு கற்பிட்டியில் திடீரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள் கற்பிட்டி மக்கள் அஞ்சி நடிங்கினர். பிறகு வானிலை அறிக்கை நிறுவனம் அதற்கு மழை என்றும் 10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்று
கூறினர் . .
7. கற்பிட்டி மன்டலக்குடா அருகே 80 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பறவையின் எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது (கிளி.காகம்.மயில்.கழுகு).


0 Comments