தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனை ஒன்றிலிருந்து பிறந்தவுடன் திருடப்பட்டிருந்த பெண் குழந்தை ஒன்று 17 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளது.
கேப் டவுன் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் செபானி நர்ஸ் (Zephany Nurse) என்ற இந்த சிறுமி கற்றுவந்துள்ளாள்.
அதே பள்ளிக்கூடத்தில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த இன்னொரு சிறுமியின் முக அமைப்புகள் செபானி நர்ஸின் முக அமைப்புகளுடன் ஒத்திருப்பதை சேர்ந்துபடிக்கின்ற மற்ற மாணவர்கள் அவதானித்துள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட டிஎன்ஏ மரபணு சோதனையின் மூலம், செபானி நர்ஸின் இளைய சகோதரியே அந்த சிறுமி என்பது உறுதியாகியுள்ளது.
1997-ம் ஆண்டில் மருத்துவமனையிலிருந்து குழந்தை திருடப்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாளை பெற்றோர் கொண்டாடியே வந்துள்ளனர்.
குழந்தையைக் கடத்திய குற்றச்சாட்டில் 50 வயதுப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.


0 Comments