சப்றான் சலீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் தலைவர் ரவூப் ஹகீமிற்கும், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மற்றும் கட்சி ஆதரவாளர்களுக்கும் களங்கம் ஏற்படுத்திய புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஏ. எஹியா ஆகிய இருவரையும் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுக்குள் உள்வாங்க கூடாது என்று தீர்மானம் ஒன்று புத்தளம் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று அதன் தலைவர் ஜவ்பர் மரைக்கர் தெரிவித்தார்.
இத் தீர்மானம் முஸ்லிம் காங்கிரஸின் செயாலாளர் ஹசன் அலி ஊடாக தலைவர் ரவூப் ஹகீமிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு வினவிய போது, கடந்த அரசில் இவ்விருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடன் இணைந்து கட்சிக்கும், கட்சியின் தலைவருக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் எதிராக செயற்பட்டனர் என தெரிவித்தார்.
மேற்படி தீர்மானத்தை கட்சி ஆதரவாளர்கள் முன்வைக்க மாவட்ட உயர்பீடத்தால் இது ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments