Subscribe Us

header ads

ஒலுவில் பிரதேசத்தில், றிசாத் பதியுதீனுக்கு வரவேற்பு (PHOTOS)

-இர்ஷாத் றஹ்மத்துல்லா-


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பினதள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னுரிமையளித்து செயற்படும் என கட்சியின் தேசிய தலைவரும்.கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் அக்கறை பிரதேச மக்கள் இன்று மாலை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் இப்பிரதேச மக்கள் அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவுகளையும் அபிவிருத்திகளிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது, பாராளுமன்ற பிரதி   நிதித்துவத்தை இம்மாவட்டத்துக்கு பெற்றுக்கொடுக்கும் வாக்குபலத்தை இந்த கிராமமும் கொண்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுத்தரும் ஒரு சந்தர்ப்பத்தை எமது கட்சிக்கு வழங்குவீர்கள் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கவிரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி.செயலாளர் நாயகம் வை.எல.எஸ்.ஹமீட்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக் .வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments