ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் நகரில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.
தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியினருக்கும் கல்பிட்டி பேர்ள்ஸ் அணியினருக்குமிடையிலான இந்த போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (25) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட தொடருக்கான ஆட்டம் ஒன்றிலேயே இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டன.
போட்டி நிறைவு பெறும் வேளை இரு அணிகளும் தலா ஒரு கோலினை பெற்றிருந்ததால் தண்ட உதை மூலம் வெற்றி தீர்மாணிக்கப்பட்டது. பிரதம நடுவரினால் வழங்கப்பட்ட தண்ட உதையில் 04:03 கோல்களினால் கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம். கியாஸ், எச்.ஹம்ருசைன், ஏ.எம்.பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.-PUTTALAM ONLINE-
0 Comments