(கே.எம்.அன்சார் - சம்மாந்துறையிலிருந்து)
முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் மீது சேறு பூசுவதனால் பூசுபவர்கள் சாதித்தது என்ன..???
அண்மைக் காலமாக இணையத்தளங்கள் வாயிலாகவும், முகநுால்கள் வாயிலாகவும் முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினருமான கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை இல்லாதொழிக்கும் முகமாகவும், அவரது சம்மாந்துறை தொகுதி சார்பான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நோக்கிய பயணத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும் சில ஊடகங்களும், இணையத்தளமும், அரசியல்வாதிகளும் ஏனைய சில போலி முகநுால்களும் இவர் மீது சேறு பூசும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இவர்களது சேறு பூசுதலுக்கு அடிப்படைக் காரணம், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எம்.ஐ.எம். மன்சூருக்கு சென்று விடக் கூடாது என்பதும், சம்மாந்துறை சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நோக்கி இவர் பயணிக்கக் கூடாது என்பதுமாகும்.
கௌரவ முன்னால் சுகாதார அமைச்சர் மன்சூர் அவர்கள் தான் சார்ந்திருக்கும் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும், மைத்திரிபால சிறிசேனாவுக்கு தனது ஆதரவினை வழங்கவில்லை என்றும், சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் மைத்திரிக்கு ஆதரவு வழங்க முன்வந்து அமைச்சுப்பதவிகளை துறந்த போதும் மன்சூர் அவர்கள் இன்னும் அவரது அமைச்சுப் பதவியை துறக்கவில்லை என்றும் மேலும் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை இவர்கள் முன்வைத்தார்கள்.
எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படவில்லை என்று அவர் மீது வீண் பழி போடுகிறார்களே..!!! நான் கேட்கின்றேன் கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாமலா இத்தனை வருட காலமும் அவர் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியில் இருக்கின்றார்...??? இவர் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் இருந்தால் ஏன் இன்னும் கட்சித் தலைமை இவரை கட்சியை விட்டும் துாக்கி துார வீசவில்லை..??? இவர் அப்படிச் செய்திருந்தால் கட்சி இவரை துாக்கி எப்போதே துார வைத்திருக்கும் ஆனால் வைக்கவில்லையே.. இதிலிருந்தே தெரியவில்லையா இவை எல்லாம் போலிக் குற்றச் சாட்டுக்கள் என்று.
எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கட்சிமாறாமல் கட்சியின் ஆரம்ப கால தொண்டனாக, கட்சிக்கு கட்டுப்பட்டு இருப்பதனாத்தான் அக்கட்சியில் இன்னும் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் இவர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் இவர் மீது சேறு பூசுனர்கள் முன்வைக்கின்றார்கள். சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் என்ற கட்சி இலங்கை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒரு மாபெரும் கட்சி அந்தக் கட்சியை மதிக்காமல், அந்தக் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக இவரால் எப்படி ஆதரவு வழங்க முடியும்...??? இது கட்சியின் கொள்கையை மீறும் செயல் அல்லவா..??? அதனால் கட்சியின் கடைசி முடிவு வரை காத்திருந்து கட்சி மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தவுடன் தனது இரு கைகளையும் உயர்த்தி பரிபூரண ஆதரவினை வழங்கினார்.
மேலும் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தனது ஆதரவினை பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு வழங்க முடிவெடுத்த அடுத்த நொடியே, சம்மாந்துறையில் மைத்திரிபால சிறிசேனா அவர்கள் கலந்து கொண்ட மாபெரும் கூட்டத்திற்கு ஹரீஸ் எம்பியோடு வருகை தந்து தனது மனப்பூர்வமாக ஆதரவினை மைத்திரிபாலவுக்கு வழங்கி மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். இவரது அந்தக் கூட்டத்திற்கான வருகையை விரும்பாத சில ஐ.தே.க ஆதரவாளர்கள், எங்கே மன்சூர் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விடுவானோ என்று அச்சம் கொண்டு அதனை குழப்பவும் எத்தனித்தார்கள், அந்த அளவுக்கு இவரது வருகையை மக்கள் எதிர்பார்த்தார்கள்.
மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவாக எந்தவித பிரச்சாரங்களிலும் மன்சூர் ஈடுபடவில்லை என்றும் இவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் தேர்தல் காலங்களில் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தனது ஆதரவாளர்களோடு சம்மாந்துறையில் தெருத் தெருவாக மைத்திரிக்கான ஆதரவினை வேண்டி பிரச்சாரம் செய்து, மக்களின் ஆதரவினை மைத்திரிக்கு பெற்றுக் கொடுத்தார்கள், மக்களுக்கு வாக்களிப்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார், தனது ஆதரவாளர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் மைத்திரிபாலவுக்கு வாக்களிக்கும்படி அறிவுறுத்தினார்கள், இது மக்களுக்கும் முஸ்லிம் காங்ரஸ் தலைமைக்கும் நன்கு தெரியும்.
சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் றவூக் ஹக்கீம் அவர்கள் மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து தனது அமைச்சுப் பதவியை துாக்கி வீசிய போதும் மன்சூர் இன்னும் அமைச்சுப்பதவியினையும், அமைச்சுக்கு சொந்தமான வாகணங்களையும் ஒப்படைக்கவில்லை என்று கண்மூடித்தனமாக குற்றம் சுமத்தினார்கள். கௌரவ றவூப் ஹக்கீம் அவர்கள் அமைச்சுப் பதவியை துறந்த போதே எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும் தனது அமைச்சுப்பதவியையும், அரச வாகணங்களையும் உடனே மக்களுக்காக துாக்கி வீசி மைத்திரியின் வெற்றியில் பங்கு கொண்டார்கள் (இராஜினாமாக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)
கட்சியாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், மக்களாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மதிப்பளித்து, மக்களின் உணர்வுகளுக்கு முகம் கொடுத்து அதற்கேற்ப தனது அரசியல் பயணத்தை அமைத்து அதன் வழி செல்லும் ஒரு அரசியல்வாதிதான் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள்.
சம்மாந்துறை மக்களுக்கு அன்வர் இஸ்மாயில் அவர்களுக்குப் பிறகு அரசியல் அந்தஸ்த்து வழங்கிய எமது முன்னால் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சரின் நற்பெயருக்கு பிறரால் கலங்கம் ஏற்படுத்தும் போது சம்மாந்துறை மக்களாகிய நாங்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
ஊடகங்களுக்கு வெறும் அறிக்கைகளை மாத்திரம் விட்டு விட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தான், தனது அமைச்சு, தனது மக்கள் என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவரது அரசியல் பயணம் இன்ஷா அல்லாஹ் எத்தனை தடைகள் வந்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டிச் செல்லும் - ஒரு நாள் வெல்லும்.





0 Comments