Subscribe Us

அமைச்சர் ஹக்கீமின் பதவியேற்பு விழாவில் ரங்கா எம்.பி (PHOTOS)


நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ரவூப் ஹக்கீமின் பதவியேற்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் கலந்துகொண்டார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் நேற்று காலையும் நகர அபிவிருத்தி அமைச்சில் நேற்று மாலையும் அமைச்சர் ஹக்கீம், பதவிகளை பொறுப்பேற்றார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா நடாத்தும் மின்னல் நிகழ்ச்சில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சிப்பது வழமையாகும்.

இந்த நிலையிலேயே அமைச்சர் ஹக்கீமின் பதவியேற்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.









Post a Comment

1 Comments

  1. Is Ranga invited by Hakeem or Just come for the function?

    ReplyDelete