ஐரோப்பாவில் leicester எனும் இடத்தில் தமிழ் பேசும் மக்களால் புதிதாக ஒரு பள்ளிவாசல் சொந்தமாக வாங்கப்பட்டுள்ளது. MASJID FIDA எனும் இயங்கி வரும் இப்பள்ளிவாசல் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வாடகை இடத்தில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு பல பகுதிகளிலும் உள்ள நல்லுள்ளம் கொண்டோரின் நன்கொடைகள் திரட்டப்பட்டு முதல் முறையாக ஒரு ஷீஆ பிரிவினரின் மஸ்ஜித் ஒன்று முற்பணம் செலுத்தப்பட்டு நிபந்தனை அடிப்படையில் தற்காலிகமாக வாங்கப்பட்டது. ஆனாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் MASJID FIDA நிருவாகம் கலந்தாலோசனை செய்து இரண்டு இலட்சம் பவுன்களை ரொக்கமாக செலுத்தி ஹிந்துக்களின் வணக்க வழிபாட்டு மையமாக இயங்கி வந்த ஒரு இடத்ததை வாங்கினர். தமிழ் பேசும் மக்களின் சொந்தமான ஒரு பள்ளிவாசல் ஐரோப்பாவின் leicester எனும் பகுதியில் முதல் தடவையாக வாங்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. இங்கு வாழும் எல்லா மொழி பேசும் பயன்பெறும் வகையில் தாவா பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மௌலவி ACK முஹம்மத் ரஹ்மானி அவர்கள் தற்போது இங்கு இமாமாக இருந்து தாவா பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
தற்போது ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கென தனியான வகுப்புக்கள் வாரம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜும்மாத் தொழுகையும் ஆரம்பிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகின்றன.
இத்தூய பணிக்காக உலங்கின் பல நாடுகளில் இருந்தும் உதவி நன்கொடைகள் செய்த இன்னும் செய்து கொண்டிருக்கின்ற அனைத்து நல்லுள்ளம் கொண்டோருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
மேலதிக தகவல் தேவையாயின் தொடர்புகொள்க
fidaleicester@gmail.com
இப்படிக்கு
மஸ்ஜித் fபிதா நிருவாகம்


0 Comments