Subscribe Us

header ads

புத்தளத்தில் வளர்ந்து வரும் கவிஞர் நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லா கற்பிட்டியின் குரலை வாழ்த்தி வெளியிட்ட கவிதை

ஆசியாவின் முத்து
இலங்கையின் சொத்து
பெயரிலேயே கெத்து
முப்பக்கம் கடல் சூழ்ந்து
இயற்கையில் உறைந்து
பார்க்கப் பார்க்கத் திகட்டா
ஊர் எங்கள் ஊர்

முச்சமயம் ஒன்றாய்
ஆலயங்களமைத்து
ஒற்றுமை பறைசாற்றும்
எங்களோட ஊர்
கற்பிட்டியெனப் பெயர்

மூலை முடுக்கெல்லாம்
ஓடியாடி சிறுக சிறுக
செய்தி சேர்த்து
மொத்தமாய் கோர்த்து வைத்த
எங்களோட தளம்
கற்பிட்டியின் குரலெனும்
இணையத்தளம்

பிந்திக் கிடைத்தாலும்
முந்திக் கிடைத்தாலும்
காண்போர் மனம் விரும்ப
அழகாய் சொற் சேர்த்து
ஊருக்கே செய்தி சொல்லும் 
எங்கள் செய்தித்தளம்

கலை தொட்டு
கானொளி வரை
முகப்பு தொட்டு
முடிவு வரை
பார்க்கப் பார்கப் பிடிக்கும்
பார்வையில் வசப்படும்
அழகிய தளம்
எஙகள் கலைத்தளம்.

மூத்த கலையாளர்களுக்கு
இடமும்
முயலும் கலையாளர்களுக்கு
களமும்
அமைத்துத் தரும் எங்கள்
கற்பிட்டியின் குரல்
இணையில்லா தளம்

நீ பல்லாண்டு வாழனும், உன்
சேவை மனம் பரந்து நிற்கனும்
இன்னார் இன்னாரென்றின்றி
பக்க பலம் பாராது
செய்தி தனை தந்திடனும்.

வாழ்க வளர்க!!
கற்பிட்டியின் குரலே
நீ சொல்லும் குரல்
எங்கள் குரலே

Post a Comment

0 Comments