Subscribe Us

பசில் ராஜபக்ஷ தம் கட்சியில் இருந்து ராஜினாமா? ஆனால் முகநூல் பக்கம் விளம்பரப்படுத்தப்பட்ட பக்கமாக இயக்கம்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக உறுதியான,நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை பசில் ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் இன்றும் பணம் செலுத்தி விளம்பரப்படுத்தப்பட்ட பக்கமாக இயங்கிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஒருவேளை வேறு கட்சியுடன் இணைந்து தம் அரசியல் வாழ்வை தொடர்வதற்காகவா இந்த நடவடிக்கை என சமூக வலைகளில் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments