Subscribe Us

header ads

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரித்தானியாவின் பழமைவாத கட்சித் தலைவர்

பிரி்த்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைவர்(British Conservative Party - Chairman), இந்த வாரம் தை பொங்கலை கொண்டாடவிருக்கும் அனைத்து பிரித்தானிய தமிழர்களுக்கும் தை பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், சமுதாயம் மற்றும் அரசியலில் பிரித்தானிய தமிழர்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். தெற்கு ஆசிய மற்றும் பிரித்தானிய நாட்டை சேர்ந்த தமிழ் மக்கள், பிரிட்டனில் தங்களது பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். தை மாதத்தின் முதல் தேதியினை தை பொங்கலாக கொண்டாடி வருகின்றர். சூரிய கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

இந்த பொங்கல் கொண்டாட்டத்தோடு ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக முறைப்படி அமைதியாக இந்த தேர்தல் நடைபெற்றது. புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இலங்கையில் அனைந்து சமூகங்களும் அமைதியான மற்றும் வளமான நாடாக வளர வேண்டும்.

உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள் என பிரி்த்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைவர்(British Conservative Party - Chairman) தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments