ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் கட்சி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அதேவேளை குறித்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதோடு ஏதாவது தவறுகள் இருப்பின் அதை திருத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வடக்கு ஆளுநரை நீக்குவது, நீதி அரசர் மொஹான் பீரிஸை நீக்குவது மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
0 Comments