Subscribe Us

header ads

முன்னாள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் சம்மாந்துறை பஸ் டிப்போவை தரம் உயர்த்த கோரிக்கை.

(சம்மாந்துறை அன்சார்)
இலங்கை போக்குவரத்து சபை,சம்மாந்துறை டிப்போவில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில்,உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்களை முன்னாள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இன்று சந்தித்துள்ளார்.
நாரஹன்பிட்டியிலுள்ள அமைச்சரின் காரியாலத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் அடங்கிய மகஜரை  முன்னால் அமைச்சர் மன்சூர் அவர்கள் கையளித்துள்ளார்கள்.
இதுவரை உப டிப்போவாக இயங்கிவரும் இதனை தனியான டிப்போவாக தரம் உயர்த்துவதுடன்,தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிரந்தர காரியால கட்டடத்தை முடிவுருத்துவதற்கு தேவைப்படும் 6 மில்லியன் ரூபாவை ஒதிக்கி தருமாறும் கோரியுள்ளதுடன் மேலதிகமா தேவைப்படும் பஸ்களையும் தந்துதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னால் அமைச்சரின் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் மிக விரைவில் நிவர்த்தி செய்வதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் வாகளித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன் மூலம் சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை் நிபர்த்தி செய்யப்பட இருப்பது முக்கிய அம்சமாகும்.

Post a Comment

0 Comments