Subscribe Us

header ads

தமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு (VIDEO)

தமக்கு எதிராக இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வாய்மை என்றாவது ஒரு நாள் வெல்லும் என தாம் நம்புவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த சில தினங்களாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனவரி 9ஆம் திகதி இராணுவ சதி மூலம் ஆட்சியில் நீடிப்பதற்கு முயற்சித்ததாக தம்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அலரி மாளிகையில் இருந்து வெளியேறியமையே அன்றைய தினம் நிகழ்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக ஆட்சியில் நீடிப்பதற்காக அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்ட மாஅதிபரிடம் அலோசனை கோரப்பட்டதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு பரஸ்பர முரணானது என்பதுடன்அறுவறுக்கத்தக்க செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டே அலரி மாளிகை நவீனமயப்படுத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மாநாடு நடைபெற்ற காலப் பகுதியில் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு அலரி மாளிகையில் வரவேற்பளிக்கப்பட்டதால் அதற்குப் பொருத்தமான முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது உருவம் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் கடிகாரங்கள்தேனீர் கோப்பைகள்ஸ்டிக்கர்,போஸ்டர்பஞ்சாங்கக் கலண்டர் போன்றவை பல்வேறு நபர்கள் வசமிருந்தமை எந்த வகையிலும் குற்றமாகாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனது மனைவி 100 கிலோகிராம் தங்கத்தை மோசடியான முறையில் விற்பனை செய்வதற்கு முயன்றதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் பதிலளித்துள்ள நிலையில்அது குறித்து மேலதிகமாக கருத்துக்கூற வேண்டியதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
திறைசேரிக்கு சொந்தமான தங்கத்தை ஜனாதிபதியின் பாரியார் அன்றி திறைசேரியின் செயலாளரினால் கூட இரகசியமான முறையில் விற்பனை செய்யமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். 
தமது புதல்வர்களுக்கு சொந்தமான எந்தவொரு லம்போகினி காரும் எந்தவொரு பகுதியிலிருந்தும் மீட்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதிதமது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டுத் தளபாடங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று கிடைக்கும் வரை அவற்றை குறித்த கொள்கலன்களுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இருந்த எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத அபிவிருத்தித் திட்டங்களை தமது அரசாங்கம் நிறைவேற்றியதை சூரையாடல் என தெரிவித்து அவற்றை குறைத்து மதிப்பிடும் திட்டமொன்று கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கத் தவறியதை சுய விமர்சனத்தின் மூலம் ஏற்றுக்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது பகிரங்க மடலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments