Subscribe Us

புத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா !

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுஸி தனது பதவி மூன்று மாதம் நிறைவடையும் நிலையில் தனது சுய விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளார்.

இவர்  வெள்ளிகிழமை (16) ஜூம்மாவுக்குப் பிறகு தனது ராஜினாமா கடிதத்தை புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.
001
தனது ராஜினாமா தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தபோது,

நான் கடந்த நகர சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலையிலும் என்னை தமது சுயேச்சை அணியின் சார்பில் நியமித்த அல்ஹாஜ் அலி சப்ரி மற்றும் அவரது சகோதரர் இனாமுல் ஹசன் உட்பட அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்..

இக்காலப்பிரிவில் என்னால்  அர்ப்பணத்துடன் செயற்பட முடிந்தது. அதற்காக நகர சபை நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உளபூர்வமான நன்றிகள்.

நகர சபையின் வரவு செலவுத் திட்டத்துக்கு நானும், எனது சக உறுப்பினருமான வாசல பண்டாரவும் ஆதரவு தெரிவித்தோம். மக்களின் நலன்கள், நகரின் அபிவிருத்திப் பணிகள், நகர சபையின் ஊழியர்கள்,அதிகாரிகளின் நிர்வாக விடயங்கள் மற்றும் சபையின் இயல்பான செயற்பாடுகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு ஆதரவு வழங்கினோம். பணத்துக்கு சோரம் போனதாக கூறப்படுவது  முற்றிலும் தவறானதாகும்.

எதிர்காலத்தில் வழமைப் போன்று சமூகப் பணிகளில் ஈடுபடுவேன். எனக்கு இதை விடவும் சிறப்பான வாய்ப்புக்கள் கிடைக்கும் போது மேலும் சிறப்பாக செயற்படுவேன். அனைத்துக்கும் இறைவன் போதுமானவன் எனக்கூறினார்.
-Puttalam Online-

Post a Comment

0 Comments