Subscribe Us

செல்வம்..!

 தங்கத்தை அரைத்துப்
பூசியது போலொரு பதுமை
வைரமே வெட்கப்படும்
கட்டழகுக் கண்கள்

வெளிச்சக் கூட்டில் விளைந்த
வெண்ணொளியான அழகுமேனி
சொர்க்க வாசலின் வசீகரம்
அன்பை வெளிப்படுத்தும் ஆளுமை

அமைதி அடக்கத்துள்
பதுங்கி நிற்கும் பெண்மை
பண்பு பாசம் பரிவுடன்
உள்ளம் உருகவைக்கும் தன்மை

இவளோடு வாழும் ஒவ்வொரு நொடியும்
வசந்தம் என் வசமாகிறது

என் வீட்டிற்கு விளக்கேற்றும் - இந்த
பெண்ணவளே என் செல்வம்

இந்தச் செல்வம்
எனக்களித்த பிள்ளைச் செல்வங்களே
வாழ்கையில் என் பெருஞ்செல்வம்

- விக்கி நவரட்ணம்

Post a Comment

0 Comments