FAROOK SIHAN
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் விருப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சியை ஏற்படுத்த புத்தளம் வாழ் யாழ் மாவட்ட முஸ்லீம் வாக்காளர்கள் தங்கள் பெரும் பங்களிப்பினை வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக யாழ் முஸ்லீம் மக்களின் ஒருங்கினைப்பாளர் N.M .M முயீன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் தேர்தல் தொகுதியில் அன்னச்சின்னத்துக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் 58844 ஆகும். இவ்வாக்குகளை அளித்த புத்தளம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இவ்வாக்குகளில் கணிசமான அளவு வாக்குகளை புத்தளம் வாழ் யாழ் மாவட்ட முஸ்லீம் வாக்களர்களும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆணமடுவ, சிலாபம், வெண்ணப்புவ, நாத்தாண்டிய போன்ற பகுதிகளில் தோல்வியடைந்தாலும் புத்தளம் தொகுதியில் 34609 அதிக படியான வாக்குகளை பெற்றதால் புத்தளம் தொகுதி பெற்றி பெற்றதையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை இன்னொரு விடயத்தை குறிப்பிட்டு காட்ட வேண்டிய தேவையும் உள்ளது.
குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள யாழ் மாவட்ட முஸ்லீம்களின் வாக்குகளான சுமார் 13இ000 வாக்குகளில் 90 வீதமான வாக்குகள் அன்னச்சின்னத்திற்கே அளிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ரீதியில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன அவர்கள் புத்தளம் மாவட்டத்தில் வெற்றி பெற்றமைக்கு இவ்வாக்குகளே காரணமாக அமைந்துள்ளதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
புத்தளம் மாவட்டத்தில் 4322 மேலதிக வாக்குகளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெற காரணமாக அமைந்தது. இவ்வாக்குகள் புத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களின் வாக்குகள் என்பது கண்கூடு ஆகும். ஆகவே நாட்டில் நல்லாட்சி மலரவும்இ புத்தளம் மாவட்டத்தை வெற்றி பெறச் செய்தமைக்கும் யாழ் மாவட்ட முஸ்லீம் வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தை எமக்களித்த வந்தாரை வாழ வைக்கும் புத்தளம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இத்தேர்தல் களத்தில் எமக்கு பல்வேறு வகையிலும் உதவி புரிந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கும்இ கட்சிகளின் பிரதேச தலைமைகளுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இந்நாட்டில் நல்லாட்சி நடை பெற பிரார்த்திப்பதாக அவர் தனது ஊடக குறிப்பில் தெரிவித்தார்.


0 Comments