மணமான புதிதில்
புது மாப்பிள்ளையாய்
மாதச் சம்பளம்
மிடுக்குடன் வந்தது
ஆனால்.. இன்று
யாசகனைப் போல்
யாசித்து நிற்க
குடிமனை கூட
குடிப்பரம்பலைக் கண்டு
எரிச்சல் பட்டுக் கொள்ளும்
----------
தீவிரவாதமாக
வளர்ந்து விட்டது வறுமை
கடன்காரனைக் கண்டால்
கவருக்குள்
ஒளிந்து கொள்கிறது
சம்பளப் பணம்!
இதற்கு மட்டும் என்ன
மான, ரோஷம்?
-----------
குடும்ப அங்கத்தவர்களில்
படிக்காத மேதைகளும்
ஏராளம்!
மனப்பால் குடிக்கும்
கவரிமான்களும்
ஏராளம்!!
பல வடிவங்களில்
மனக் கோட்டைகள்
மனதிலே பதிந்தாலும்
புதுப்பிக்கவென்று
இலட்சியத்துடன்
லட்சமும் இருக்க வேண்டும்
--------------
அடுத்த வேளை
உணவுக்குக் கூட
வயிறு விண்ணப்பிக்க
கடந்து வந்த
வரலாறுகள்
அழிந்து விடுமோ?
-------------
ஈற்றில்
இறுதிக் கிரியைக்கு கூட
மாதச் சம்பளத்தின்
எச்சில் மிஞ்சுமா..
கேள்விகுறிதான்!
- பாத்திமா நளீரா
வீரகேசரி வார வெளியீடு 25/01/2015
-ABDUL WAHID-
0 Comments