குழந்தைகளுக்கு கதை சொல்வது நின்றுவிட்டது! இந்தக் கால குழந்தைகளுக்கு பாட்டி, தாத்தாவை விட இண்டர்நெட், ஐபோன், டாப்லெட்டுகளின் மீதுதான் அதிக பாசம் வளர்ந்துகொண்டிருக்கிறது!அந்தக் கதைகளை பாட்டிமார்கள் சொல்லும் போதே கூடவே ஆரோக்யமான உணவையும், பண்பையும்,பாசத்தையும் அப்படியே ஊட்டிவிடுவார்கள்!
இந்தக் கதைகளில் மிக முக்கியமானது கிராமீயக் கதைகள்!வேறுபட்ட, செழிப்பான கிராமியக் கதைகள் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு உண்டு.புராதன, நவீன சரித்திர ஆராய்ச்சிகள் கூட இப்போது அரசியல் பக்கமாக திரும்பிவிட்டது. சாதாரண மக்களிடம் உள்ள சிக்கலான கலாச்சாரம், பாரம்பர்யப் பெருமைகள், சமூக நம்பிக்கைகளின் மீது மிகக் குறைவான கவனமே செலுத்தப் படுகிறது!
நமது சமூகவியலாளர்கள் மக்களுடைய பழக்கங்கள் நம்பிக்கைகள் காலமாற்றத்தினால் அதில் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்! அதில் முக்கியமான புறக்கணிக்கப்பட்டது இந்த கிராமீயக் கதைகள்!
இந்த கதைகள் மூலமாகத் தான் பண்டைய மக்களின் பின்னனி!இந்த கிராமீயக் கதைகள் யாத்திரிகர்கள், மேளாக்கள், திருவிழாக்கள், பொருட்காட்சிகள் வழியாக நாடெங்கிலும் பரவியது!திரிந்து கொண்டிருக்கும் நாடோடிகள், சாதுக்கள், துறவிகள் மூலமாக இது பரவியது!வடக்கே இருந்த மக்கள் தெற்கே உள்ள கோவில் களுக்கு வந்தார்கள்!இங்கிருந்தவர்கள் அங்கே போனார்கள்! அப்படிப் போகும் போது அவர்கள் கிராமீயக் கதைகள், பாடல்கள், புதிர்கள், பழமொழிகளையும் உடன் சுமந்து சென்றார்கள்!
இந்த கதைகளில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தேசிய ஒருமைப்பாடு இருப்பதை காண முடியும்! இந்த பயணங்களின் போது இந்த நாடோடிகள், துறவிகள், சாதுக்கள் யாத்தீர்கர்கள் பொதுச் சத்திரங்கள், சாவடிகளில் தங்குவார்கள்!
இங்கே அவர்கள் கூடும்போதுதான் இந்த கிராமீய விஷய பரிமாறல்கள் நடக்கும்!இதனால் தான் இந்த கிராமீய இலக்கியத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு ஒற்றுமை இருப்பதை பார்க்க முடியும்!காஷ்மீரில் இருக்கும் ஒரு கிராமீயக் கதை எங்கோ ஒரு கேரள கிராமத்தில் கேட்கலாம்! லேசான மாறுதல்களோடு!
இந்தக் கதைகள் காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக வாய் வழியாகவே பயணம் செய்து இறுதியாகத்தான் அது எழுத்த வடிவம் பெற்றது!இந்த கிராமீயக் கதையாளர்கள் இந்த கதைகள் குறித்த அலசல்களில் பல்வேறு அணுகு முறையக் கையாண்டார்கள்!
மாக்ஸ் முல்லர் இந்த கிராமீய இலக்கியங்களில் பொதுவான பாணி இருப்பதையும் அதற்கான ஆதாரங்கள் நமது இயற்கை இதிகாசங்களில் இருப்பதாகச் சொன்னார்!
ஸ்ர் எல். கோம் என்கிற சரித்திர ஆராய்ச்சியாளர் இந்த கிராமீயக் கதைகளை சரித்திர பூர்வமாக அணுக வேண்டுமென்றார்.மனிதனின் சந்தேகங்களுக்கும், உள்ளூணர்வுகளுக்கு இந்த புராதன நாடோடிக் கதைகள் தீர்த்து வைக்கிறது என்றார் ப்ரேசர் என்கிற இன்னொரு ஆராய்ச்சியாளர்!
இத்தனை நாடோடிக் கதை பொக்கிஷங்கள் இந்தியாவில் இருந்தாலும் இதைப் பற்றி கவனிக்க ஆரம்பித்ததே காலம் கழித்தத்தான்.இதற்குக் காரணம் பீகாரில் தோன்றிய பஞ்ச தந்திரக் கதைகள் நாடெங்கிலும் ஏன் உலகமெங்கும் இந்த தொலைக்காட்சிகள் மூலம் போய் மக்களிடம் சேர்ந்துவிட்டது!இந்த கட்டுக்கதைகளின் பூர்விகம் ஐரோப்பிய நாடுகள் என்கிறார் பென்லே என்கிற ஆராய்ச்சியாளர்!
பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை இந்த கதைகள் ஈர்த்ததற்கான அடிப்படை காரணங்கள் என்ன ?
இந்த கதைகளை எத்தனை முறை திரும்பச் சொன்னாலும் அது தன் சுவாரஸ்யத்தை இழப்பதில்லை!நமது அடிப்படை சந்தேகங்களுக்காக விடைகள் இந்த கிராமீயக் கதைகளில் கிடைப்பதால் ஏற்படும் திருப்தி!
இதிலிருக்கும் கனவுலக மாயைகள், நம்பவைக்கும் தன்மையினால் சந்தேகமில்லாம இதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்!
இந்த கதைகளை எத்தனை முறை திரும்பச் சொன்னாலும் அது தன் சுவாரஸ்யத்தை இழப்பதில்லை!நமது அடிப்படை சந்தேகங்களுக்காக விடைகள் இந்த கிராமீயக் கதைகளில் கிடைப்பதால் ஏற்படும் திருப்தி!
இதிலிருக்கும் கனவுலக மாயைகள், நம்பவைக்கும் தன்மையினால் சந்தேகமில்லாம இதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்!
இதில் மூலமாக ஆதிமனிதன் உலகத்திலிருக்கும் பல மர்மங்களுக்கு விடை தேட ஆரம்பித்தான்!இதில் வரும் பாம்பு நிலாவை விழங்கும் என்று சொன்ன இந்த மாதிரி கதைகளில் ஏற்பட்ட சுவாரஸ்யத்தினால் தான் விஞ்ஞானிகள் அது சந்திர கிரகணம் என்று கண்டு பிடித்தார்கள்!
பாம்பின் தலையின் ஒரு பாரம் இருக்கும். அந்த பாம்பு சோர்ந்து தலையைத் திருப்பினால் அந்த பாரம் கீழே விழந்து தான் பூகம்பமாக வெடிக்கிறது என்கிற கதையினால் பூகம்பதைப் பற்றி விஞ்ஞானம் தெரிந்து கொண்டது
இந்த கதைகள் மூலமாகத்தான் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள மிருக, தாவர ராஜ்யங்களை தெரிந்து கொண்டான்!
மிருகங்களின் புத்தியையும் பழக்கங்களையும் வைத்து அதை பல வகையாக பிரித்தார்கள்!
இந்த கதைகள் மூலமாகத்தான் மனிதன், தன்னைச் சுற்றியுள்ள மிருக, தாவர ராஜ்யங்களை தெரிந்து கொண்டான்!
மிருகங்களின் புத்தியையும் பழக்கங்களையும் வைத்து அதை பல வகையாக பிரித்தார்கள்!
நரி என்றால் சூழ்ச்சி!
மென்மைக்கு பசு!
சிங்கமும், புலியும் கம்பீரம்!
வேகம்,மென்மை, புத்திசாலித்தனம் குதிரை!
நினைவாற்றலுக்கு யானை!
மனிதனுக்கு நெருக்கமானது குரங்கு!
ஒரினச்சேர்க்கைக்கு மயில்!
தந்திரத்திற்கு காக்கை!
மெதுவாக இருந்தாலும், அழத்தமாக காலூன்று இருப்பது ஆமை!
முயல் வேகமாக இருந்தாலும் சோம்பேறி!
அடர்த்தியான இலைகளும், தடியான மரங்களும் கொண்ட கானகங்கள் திருடர்கள், கொள்ளக்காரர்களின் புகலிடங்கள்!
காட்டில் தனியாக குடிசை போட்டு வாழ்கிறவன் சந்தேகத்திற்குரியவன்!
காட்டில் தனியாக குடிசை போட்டு வாழ்கிறவன் சந்தேகத்திற்குரியவன்!
இந்த நம்பிக்கைகளெல்லாம் நாடோடி கதைகள் இறைந்து கிடக்கிறது!
ஏன்? எதற்கு? எப்படி ? என்கிற கேள்விகளை ஆதிமனிதனுக்குள் இந்தக் கதைகள் விதைத்தது!
இந்தக் கதைகள் முரட்டுத்தனமான கற்பனை கதம்பம்!
சூன்யக்காரர்களும், அரக்கர்களும் இந்த வகையைச் சேர்ந்தது!
இந்த நாடோடிக் கதைகள் வியப்பானவைதான்! அதில் விஞ்ஞான துல்லியங்களை எதிர்பார்க்க முடியாது!
சமுதாய வளர்ச்சியின் பால பாடமே இந்த நாடோடிக் கதைகளிலிருந்து கிளம்பியிருக்கிறது என்பதை சமூகவியல் ஆராய்ச்சி உறுதி செய்திருக்கிறது!
அந்தக் கதைகளில் சமுதாய வளர்ச்சி மட்டுமா அடங்கியிருக்கிறது!
நம் குழந்தைகளின் மனதில் அபாரமான ஆர்வத்தைத் தூண்டும், அவர்களை கற்பனை உலகத்தில் மிதக்க விட்டு பல லட்சிய வேர்களை அந்த பிஞ்ச மனங்களில் பதித்தது நம் பாட்டிமார்கள் கதைகள்!
யார் சொல்லப் போகிறார்கள்!
யார் சொல்லப் போகிறார்கள்!
சுதாங்கன்
-indru.todayindia-


0 Comments