Subscribe Us

அமைச்சர் மங்களவின் முறைப்பாட்டிற்கு பொலிஸார் ஆதரவு

கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் வெளியிட்ட தினம் இரவு மகிந்த அரசாங்கம் செய்யவிருந்த இராணுவ புரட்சி திட்டம் பற்றி வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர செய்த முறைப்பாடு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனையைப் பெற பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டு சம்பந்தமாக நீதிபதியின் ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக நம்பத்தகுந்த ஆதாரங்களும் முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments